Sunday 5th of May 2024 06:16:31 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா பாதிப்பு
பிரான்ஸில் மேலும் 1,438  போ் உயிரிழப்பு;  கொரோனா பலி 17 ஆயிரத்தைக் கடந்தது!

பிரான்ஸில் மேலும் 1,438 போ் உயிரிழப்பு; கொரோனா பலி 17 ஆயிரத்தைக் கடந்தது!


பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நேற்று 1,438 ஆல் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார பணிப்பாளா் ஜெனரல் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த இறப்பு எண்ணிக்கை நேற்று ஒரு நாளில் மட்டும் பதிவானதல்ல. சமீபத்திய நாட்களில் அறிவிக்கப்படாத இறப்புகளும் இந்த எண்ணிக்கையி்ல் அடங்கும் எனவும் அவா் கூறினார்.

நேற்று அறிவிக்கப்பட்ட 1,438 இறப்புக்களுடன் பிரான்ஸில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17,167 ஆக உயர்ந்துள்ளது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி பிரான்சின் உயிரிழப்பு மிக அதிகமாக உயர்ந்தபோதும் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று ஏழாவது நாளாகக் குறைந்தது.

எனினும் 4,560 போ் புதிதாகத் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவி்க்கப்பட்டுள்ள நிலையில் இங்கு தொற்று நோயாளா்களின் மொத்த எண்ணிக்கை 147,863 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் இன்னமும் தீவிரமாகவே உள்ளது. நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரெஞ்சு சுகாதார பணிப்பாளா் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார்.

சமூக முடக்கல்களை தொடா்ந்து மதித்து நடப்பது இன்றியமையாதது எனவும் அவா் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE